தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று இரவு அறிவித்தார்.


Next Story