தசரா திருவிழா: 3 வயது குழந்தைக்கு டிக்கெட் கேட்ட கண்டெக்டர் - நெல்லை வந்ததும் ஆம்னி பஸ்சை சிறைபிடித்த பயணியின் குடும்பத்தினர்...!


தசரா திருவிழா: 3 வயது குழந்தைக்கு டிக்கெட் கேட்ட கண்டெக்டர் - நெல்லை வந்ததும் ஆம்னி பஸ்சை சிறைபிடித்த பயணியின் குடும்பத்தினர்...!
x
தினத்தந்தி 1 Oct 2022 2:19 PM IST (Updated: 1 Oct 2022 2:19 PM IST)
t-max-icont-min-icon

தசரா திருவிழா, தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சி விளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி சுகன்யா(வயது33). இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிரார். தசரா திருவிழாவிற்கு ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திசையன்விளை செல்லும் அமினி பஸ்சில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அவரது மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணையும் முத்துகிருஷ்ணன் அனுப்பி வைத்துள்ளார்.

சுகன்யா தன்னுடன் 3 வயது மற்றும் 4 வயது குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். அவர்கள் வந்த பஸ் ஓட்டன்சத்திரத்தில் இரவு உணவுக்காக நின்றபோது, அவரிடம் பஸ் கண்டெக்டர் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

அதை ஏற்காத கண்டெக்டர் அவர்கள் அனைவரையும் பஸ்சை விட்டு கீழே இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் நிலை அறிந்த பஸ் பயணி ஒருவர் சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.600 கொடுத்துள்ளார். அதன் பின்பு அவர்கள் பஸ்சில் ஏறியுள்ளனர்.

நடந்த சம்பவம் குறித்து சுகன்யா அவரது உறவினர்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த ஆமினி பஸ் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்திற்கு வரும்போது பஸ்சை மறித்து சிறைபிடித்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற திசையன்விளை போலீசார் பஸ்சை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஆமினி பஸ் நிர்வாகத்தின் சார்பில் நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆமினி பஸ் விடுவிக்கப்பட்டது.


Next Story