துவாரகாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் சேவை - தெற்கு ரெயிவே அறிவிப்பு


துவாரகாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் சேவை - தெற்கு ரெயிவே அறிவிப்பு
x

சவுராஷ்டிரா தமிழ் சங்கத்தை முன்னிட்டு துவாரகாவில் இருந்து மதுரைக்கு 11 நாட்கள் சிறப்பு ரெயில் சேவை செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயிவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளாதாவது,

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் முன்னிட்டு குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் சேவைகள்.

நாளை முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 11 நாட்கள் (வ.எண்: 06302) தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகாவில் இருந்து புறப்படும். இந்த ரெயில் நான்காம் நாள் காலை 10.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும்.

துவாரகாவில் புறப்படும் இந்த ரெயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், சூரத், அகோலா, நன்டெட், ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story