மாம்பழங்களுக்கு அதிக விலை கிடைக்க இ-நாம் திட்டத்தை பயன்படுத்த வேண்டும்-வியாபாரிகள்-விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்


மாம்பழங்களுக்கு அதிக விலை கிடைக்க இ-நாம் திட்டத்தை பயன்படுத்த வேண்டும்-வியாபாரிகள்-விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
x

மாம்பழங்களுக்கு அதிக விலை கிடைக்க இ-நாம் திட்டத்தை பயன்படுத்த வேண்டும்-வியாபாரிகள்-விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

விருதுநகர்

ராஜபாளையம் பகுதியில் மாம்பழத்திற்கு சரியான விலை கிடைக்க இ-நாம் திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இ-நாம் திட்டம்

ராஜபாளையத்தில் வேளாண் விற்பனை குழு சார்பில் மாம்பழ விவசாயிகள் மற்றும் கொள் முதலாளர்கள் பங்கேற்ற சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வேளாண் வணிக இணை இயக்குனர், மாம்பழ விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்த மாம்பழத்திற்கு அதிக விலை கிடைக்கவும், அதற்கான தொகை உடனடியாக வழங்கப்படவும், தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் மாம்பழங்களை விற்பனை செய்ய வலியுறுத்தினார்.

வேளாண் விற்பனை கூடங்களில் இ-நாம் திட்டத்தின் மூலம் விற்பனை கூடத்திற்கு மாம்பழத்தை கொண்டு வரும் விவசாயிகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. மாம்பழம் அறிவிக்கப்படாத வேளாண் விளை பொருள் என்பதால் 100 ரூபாய்க்கு 15 காசுகள் சேவை கட்டணமாக வியாபாரிகளிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படும் என வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.

தரமான மாம்பழங்கள்

மாம்பழத்தை தரம் பிரித்து தரத்திற்கேற்ப போட்டி விலைக்கு விற்று லாபம் அடைய இ-நாம் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மின்னணு ஏலத்தில் கலந்து கொண்டு நல்ல தரமான மாம்பழங்களை கொள்முதல் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

விவசாயிகள் மாம்பழத்தை காம்புடன் கொண்டு வந்தால் எந்த தரமாக இருந்தாலும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 8 டன் அளவிற்கு கொள்முதல் செய்ய தயாராக உள்ளதாக ராஜபாளையத்தை சேர்ந்த உமா தெரிவித்தார். நன்கு முதிர்ச்சி அடைந்த மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் விவசாயிகளுக்கும், கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாம்பழ சாகுபடியில் பெரும்பாலும் குத்தகைதாரர்கள் உள்ளதால் வங்கி கணக்கு மற்றும் ஆதார் நகல் மட்டும் வைத்து ஏலத்தை நடத்துமாறும், மாம்பழ மதிப்பு கூட்டு பயிற்சி வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.


Next Story