ேபாலி டாக்டா் கைது
ேபாலி டாக்டா் கைது
நாகை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் திருமுருகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று நாகூரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது நாகூர் பெரிய கடைத்தெருவில் ஒரு மருந்து கடையில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்்தினர். விசாரணையில் அவர் நாகூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 52) என்பதும், அவர் மருந்து கடை நடத்தி வந்ததும், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை நாகூர் போலீசார் கைது செய்தனர்.