தொற்று பரவல் எதிரொலி: கொரோனா தடுப்பூசி முகாம் - நாளை நடைபெறுகிறது


தொற்று பரவல் எதிரொலி: கொரோனா தடுப்பூசி முகாம் - நாளை நடைபெறுகிறது
x

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசின் உத்தரவின்படி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம் 1,100 தடுப்பூசி மையங்களில் 4,400 பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 17 லட்சத்து 69 ஆயிரத்து 361 பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 934 பேர் ஆவார்கள்.

இதேபோல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 865 பேர் முதல் தவணையும், இரண்டாம் தவணையாக 83 ஆயிரத்து 54 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை முதல் தவணையாக 56 ஆயிரத்து 906 பேருக்கு, இரண்டாம் தவணையாக 25 ஆயிரத்து 605 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story