செந்தில்பாலாஜியை காவலில் எடுத்தது அமலாக்கத்துறை...!
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது.
சென்னை,
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட்டு, செந்தில் பாலாஜியை வரும் 12-ம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.