"விக்ரம் படம் போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார்" - அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. பேச்சு


விக்ரம் படம் போல எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் - அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. பேச்சு
x

எடப்பாடி பழனிசாமியின் வெற்றி விக்ரம் படம் போல இருக்கும் என்று ஈ.பி.எஸ். ஆதரவாளரான அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அவர், கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற 'விக்ரம்' திரைப்படத்தை குறிப்பிட்டு பேசினார்.

தமிழக மக்கள் மற்றும் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பாக எடப்பாடி பழனிசாமி விளங்கி வருவதாக தெரிவித்த அவர், 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுகவை வழிநடத்துவார் என்று தெரிவித்தார்.


Next Story