எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை


எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை
x

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகிறார்.

மதுரை


தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகிறார்.

வரவேற்பு

நெல்லையில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து மதுரை வழியாக நெல்லை செல்கிறார். மதுரைக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, கப்பலூரில் காலை 6 மணிக்கு மதுரை மாநகர் மாவட்ட ம்,மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்புக்கு பின் எடப்பாடி பழனிசாமி நெல்லை புறப்பட்டு செல்கிறார்.

அங்கு திருமண நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட அவர், மீண்டும் மதுரை வருகிறார். பகல் 1.30 மணியளவில் தனக்கன்குளத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் அங்கு கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கொடியேற்றுகிறார்.

இணையும் விழா

அதனைத்தொடர்ந்து மதுரை ரிங்ரோடு வலையங்குளத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடக்கிறது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை டாக்டர் சரவணன் செய்து இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின், எடப்பாடி பழனிசாமி சாலை மார்க்கமாக சேலம் புறப்பட்டு செல்கிறார்.


Next Story