12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அன்பிற்கினிய மாணவ,மாணவிகள், நம்பிக்கையுடனும்-சிரத்தையுடனும் ,

அச்சமில்லாமலும் தேர்வை எதிர் கொண்டு , அனைவரும் வெற்றி பெற்று உங்கள் எதிர்காலம் செழிப்புற உளமாற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



Next Story