எடப்பாடி பழனிசாமி ஆறுதல்


எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
x

ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கஆசாரி (வயது 93). இவர் உடல்நல குறைவால் கடந்த 17-ந் தேதி காலமானார். இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டிற்கு நேரில் வந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவசிலிங்க ஆசாரி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 20 நிமிடம் கே.டி.ராஜேந்திர பாலாஜி வீட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி பின்னர் கார் மூலம் மதுரைக்கு சென்றார்.


Related Tags :
Next Story