முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அதே நாளில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு, வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்தும் மேலும் வரும் 24ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.