அதிமுகவின் 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவின் 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து, முதல் முதலாக உரிமைக்குரல் எழுப்பி, அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததன் விளைவாக, முதல்-அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்போடு கரும்பு சேர்க்கப்படும் என்கிற அறிவிப்பை அறிவித்தார்.
இன்றைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் மனமகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கிறனர்.
ஏற்கனவே ஜி20 மாநாட்டிலே வந்த அந்த அழைப்பு, அன்றைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஆளுங்களும்கட்சிகளுக்கு, எதிர்க்கட்சிகளுக்கு அழைக்கிறபோது தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாருக்கு அழைப்பு கொடுத்தார்கள்.
இன்றைக்கு மத்திய சட்ட ஆணையம் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கருத்து கேட்கின்ற அந்த கடிதத்தில் அதிமுக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்திருப்பது அதிமுகவில் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் என்று பாரம்பரியத்தினுடைய 3-வது தலைமுறையாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.