பிரதமர் மோடி நினைத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வத்தை ஒன்று சேர்த்து வைக்கலாம் - கே.பாலகிருஷ்ணன்


பிரதமர் மோடி நினைத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வத்தை ஒன்று சேர்த்து வைக்கலாம் -  கே.பாலகிருஷ்ணன்
x

பிரதமர் மோடி நினைத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வத்தை ஒன்று சேர்த்து வைக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலசொக்கநாதபுரம்,

தேனி மாவட்டம் போடியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர்.

மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அதிகார போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. பிரதமர் மோடி நினைத்தால் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வத்தை ஒன்று சேர்த்து வைத்தாலும் வைக்கலாம்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story