வந்தே பாரத் ரெயிலில் பயணித்த எடப்பாடி பழனிசாமி..!


வந்தே பாரத் ரெயிலில் பயணித்த எடப்பாடி பழனிசாமி..!
x

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து சென்னைக்கு "வந்தே பாரத்" ரெயிலில் பயணம் செய்தார்.

சேலம்,

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவின் 14-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

இந்தநிலையில், இன்று சென்னை வர திட்டமிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தேபாரத் ரெயிலில் பயணிக்க முடிவு செய்தார். அதன்படி காலை கோவையில் இருந்து சென்னைக்கு புறப்ட்ட வந்தே பாரத் ரெயிலில் சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

இந்த ரெயில் பயணத்தில் மக்களோடு மக்களாக தனது இருக்கையில் இருந்து செய்திதாள் படித்தும், ஜன்னல் வழியாக இயற்கை அழகை ரசித்தும் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ரெயில் பயணிகள் அவரோடு ஆர்வமோடு செல்பி எடுத்து மகிழந்தனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளஙகளில் வைரலாகி வருகிறது.


Next Story