திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்


திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Jun 2023 1:07 PM GMT (Updated: 6 Jun 2023 3:08 PM GMT)

மாநில வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை என்று கவர்னரின் கருத்துக்கு மு.க ஸ்டாலின் மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார்.

சென்னை,

திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். தமிழககத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்புற வாழ்வு மையங்களை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க ஸ்டலின் பேசினார்.

அப்போது முதல் அமைச்சர் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள். மாநில வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை,மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார்.

மாநில வளர்ச்சி ஒருவருக்கு தெரியவில்லை, மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார். சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

கடுமையான கொரோனா காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் செயல்பாடுகளால், அந்த கடினமாக கட்டத்தைக் கடந்தோம். அவருடன் பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதால் கடந்து வர முடிந்தது.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போன்று நகரங்களுக்கும் நலவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில், கவர்னரின் கருத்துக்கு மறைமுகமாக முதல் அமைச்சர் பதில் கொடுத்துள்ளார்.


Next Story