கல்வி விழிப்புணர்வு சுற்றுலா


கல்வி விழிப்புணர்வு சுற்றுலா
x

கல்வி விழிப்புணர்வு சுற்றுலா நடந்தது.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளந்தை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, பூவாணிப்பட்டு மற்றும் வெத்தியார்வெட்டு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலாவாக கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் மாளிகைமேடு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் அகழாய்வு செய்யும் இடங்களையும், அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற செப்புக்காசுகள், சீன மணிகள், கண்ணாடி வளையல்கள் மற்றும் அரிய பொருட்களையும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். மேலும் பண்டைய காலத்து நாகரிகம், அப்போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள சிற்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை உதவி அலுவலர் சரவணன் மாணவ, மாணவிகளுக்கு உதவி புரிந்தார். மேலும் இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story