நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 30 காசுகள் சரிவு515 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 30 காசுகள் சரிவு515 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:41+05:30)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் சரிவடைந்து 515 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

30 காசுகள் சரிவு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 545 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 30 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-550, ஐதராபாத்-490, விஜயவாடா-510, மைசூரு-550, மும்பை-570, பெங்களூரு-550, கொல்கத்தா-570, டெல்லி-530.

நுகர்வு குறைந்தது

இந்த விலை குறைப்பு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, 50 காசுகள் குறைத்து விற்பனை செய்ய நாமக்கல் முட்டை விற்பனை விலை நிர்ணய ஆலோசனைக்குழு (நெஸ்பேக்) பரிந்துரை செய்கிறது. ஆனால் வியாபாரிகள் 85 காசுகள் குறைத்து, 460 காசுக்கே கொள்முதல் செய்கின்றனர். மேலும் ஐதராபாத் உள்ளிட்ட வடமண்டலங்களில், கொள்முதல் விலையை குறைத்து உள்ளனர்.

அவற்றை கருத்தில் கொண்டு நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை, 30 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது. தை பூசம் நெருங்கி வருவதால் தமிழகத்திலும் முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே கணிசமாக குறைந்து உள்ளது. தை பூசத்துக்கு பின்னர் முட்டை விற்பனை சூடுபிடிக்கும். தற்போது உற்பத்தி செலவு மட்டுமே பண்ணையாளர்களுக்கு கிடைக்கிறது. எவ்வித லாபமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

கறிக்கோழி கிலோ ரூ.85-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.89 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story