நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு490 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு490 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:46 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக உயர்ந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.127 ஆக அதிகரித்துள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.96 ஆக உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story