நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு485 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு485 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:00 PM GMT (Updated: 18 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 85 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே கறிக்கோழி கிலோ ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.10 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி கிலோ ரூ.104 ஆக ஆனது.

முட்டைக்கோழி கிலோ ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலை ரூ.6 உயர்த்தப்பட்டு முட்டைக்கோழி கிலோ ரூ.92 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.


Next Story