நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் வீழ்ச்சி520 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் வீழ்ச்சி520 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:12 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் வீழ்ச்சி 520 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 530 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.114-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.8 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக குறைந்து உள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.95 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 4 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story