மின்சாரம் தாக்கி முதியவர் சாவு


மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
x

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 75). இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. அப்போது தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால் குடிநீர் வீணாகி வந்தது. இதை தவிர்க்க மின்மோட்டாரை நிறுத்த அங்கிருந்த சுவிட்சை அணைக்க அர்ச்சுணன் முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்தபுகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story