3 துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்சாரம்


3 துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்சாரம்
x

3 துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கரூர்

மின் நிறுத்தம்

கரூர் மின் செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கரூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம்சாலை, கோவைரோடு, வடிவேல்நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டி பாளையம், சுக்காலியூர், சேலம் புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி

இதேபோல் மலைக்கோவிலூர் மற்றும் புகழூர் துணைமின் நிலையங்களிலும் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து வினியோகம் பெறும், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன் பாளையம் பகுதிகளிலும்,

புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவுட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, தர்மராஜபுரம், ஒரத்தை, மேட்டுப்பாளையம், நாணபரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கரூர் கிராமியம் மின் செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story