சென்னை மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான மின் மோட்டார்கள் திருட்டு
மின் மோட்டார் இயந்திரங்கள் மற்றும் மின் கம்பிகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மின் மோட்டார்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளாகத்தில் கடந்த 28-ந்தேதி உதவி பொறியாளர் ஜெயந்தி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் இயந்திரங்கள் மற்றும் மின் கம்பிகள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருடுபோன பொருட்களின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story