நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் சேதம்


நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் சேதம்
x

நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகனம் மோதி மின்கம்பம் சேதம் அடைந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பகுதியையும், டவுனையும் இணைக்கும் ஈரடுக்கு மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லை டவுன் பகுதியில் இருந்து சந்திப்பு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாலத்தின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் உடடினயாக சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீர்செய்து, முறிந்து கிடந்த மின்கம்பத்தை அகற்றினர்.

1 More update

Next Story