திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி


திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
x

திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்

சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு நேற்று பகல் 2½ மணிக்கு மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவொற்றியூரில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன.

இதுபற்றி ரெயில்வே துறை தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணியளவில் சிக்னல் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய மின்சார ரெயில்களும், அடுத்தடுத்து வந்த பினாகினி, சங்கமித்ரா போன்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களும் சுமார் 1 மணிநேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.


Next Story