திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி


திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
x

திருவல்லிக்கேணியில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 45). எலக்ட்ரீசியனான இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் மாலை, பாபு திருவல்லிக்கேணி நடுக்குப்பம் கேனல் ஏரியாவில் உள்ள மின்கம்பத்தில் தகுந்த பாதுகாப்பு மற்றும் அனுமதியின்றி ஏறி பழுது பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாபு உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story