இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 15 July 2023 4:33 PM IST)
t-max-icont-min-icon

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், கொழிஞ்சிபாளையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர் பந்தல்பாளையம், சின்னாக்கவுண்டனூர், வெப்படை, செவ்தாபுரம், பாதரை, அம்மன் கோவில், மக்கிரிபாளையம், முதலை மடையனூர், திருநகர் புறவழிச்சிட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இந்த தகவலை சங்ககிரி மின்சார வாரிய செயற்பொறியாளர் உமாராணி கூறியுள்ளார்.

இதேபோல் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்னாம்பள்ளி, செல்லிபாளையம், ஏரிபுதூர், ஏ.என்.மங்கலம், எஸ்.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதேபோன்று பூசாரிப்பட்டி, அனுப்பூர், கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிக்குட்டை, பள்ளக்காடு, காட்டூர், குள்ளம்பட்டி, வெள்ளியம்பட்டி, பருத்திகாடு, தாதனூர், பூவனூர், குப்பனூர், மூக்கனூர், அரமனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, செங்காட்டூர், கத்திரிப்பட்டி, அடிமலைபுதூர் ஆகிய பகுதிகளிலும் மின்சார விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் கிழக்கு மின்சாரவாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்து உள்ளார்.


Next Story