தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி


தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
x

கடந்த காலங்களை விட 2,500 மெகாவாட் கூடுதல் மின் தேவை உள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை,

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஆறரை நாட்களுக்கான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது.

வட சென்னை அனல்மின் நிலையத்தின் 3-வது நிலையில் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கப்படும். தமிழகத்தில் தற்போது மின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களை விட 2,500 மெகாவாட் கூடுதல் மின் தேவை உள்ளது. நாளொன்றுக்கு 8,800 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மின் தேவை அதிகரித்துள்ளதால் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story