மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின் ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தமிழ்நாடு மின்வாரியம் உடனே தொடங்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் உள்ள அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story