காரிமங்கலம் அருகே மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
காரிமங்கலம் அருகே மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த எலுமிச்சனஅள்ளி, அண்ணாமலை அள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 3 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. இந்த யானைகள் அங்குள்ள கரும்பு தோட்டத்தை நாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் 3 யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அருணேஸ்வரர் மலைக்கோவில் அடிவாரத்தில் உள்ள மாந்தோட்டத்தில் முகாமிட்டிருந்த யானைகள் வனத்துறையினர் மற்றும் போலீசார் விரட்டினர். தற்போது 3 யானைகளும் சஞ்சீவராயன் மலைப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த 3 யானைகளையும் வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருவதுடன் இரவு நேரத்தில் மலைப்பகுதியில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். யானைகள் காரிமங்கலம் நகரம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.