6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலி பட நடிகர் கைது


6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலி பட நடிகர் கைது
x

விருகம்பாக்கத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இஅவர் தமிழ் சினிமா மற்றும் நாடகங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார்.மேலும் காமெடி நடிகர் வடிவேலு நடித்த எலி படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சினிமாத்துறையை சேர்ந்த தம்பதிகளின் 6 வயது மகள் இவரது வீட்டிற்கு விளையாட வந்துள்ளார். அப்போது அச்சிறுமியை தனியாக அறைக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சீதா வழக்கு பதிவு செய்து சினிமா துணை நடிகரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் துணை நடிகர் ராஜ், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து அவரை போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story