"நீண்டகாலம் ஆட்சி பீடத்தில் இருந்தவர் எலிசபெத்" - ராகுல் காந்தி இரங்கல்


நீண்டகாலம் ஆட்சி பீடத்தில் இருந்தவர் எலிசபெத் - ராகுல் காந்தி இரங்கல்
x

ராணி எலிசபெத் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குமரி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், இங்கிலாந்து மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நீண்டகாலம் ஆட்சி பீடத்தில் இருந்த எலிசபெத், தனது நாட்டுக்காக கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story