விரோத போக்கை கடைபிடிப்பதாக ஆர்.டி.ஓ.க்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விரோத போக்கை கடைபிடிப்பதாக ஆர்.டி.ஓ.க்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆர்.டி.ஓ. வருவாய்த்துறை ஊழியர்களிடம் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க நீலகிரி மாவட்ட ஊழியர்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கூறுகையில் ஊட்டி ஆர்.டி.ஓ., வருவாய்த்துறை ஊழியர்களிடம் விரோத போக்கை கடைபிடிக்கிறார். அலுவலகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நிர்பந்திக்கிறார். விடுமுறை நாட்களில் பணிக்கு வருமாறு கூறுகிறார். இதனால் பணிப்பழு அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது என்றனர். இதில் அரசு ஊழியர் சங்க செயலாளர் அய்யனார், நீலகிரி கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகி தீபக், கிராம உதவியர் சங்க மாவட்ட தலைவர் அப்துல் மஜீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story