விக்கிரவாண்டியில் வேலைவாய்ப்பு முகாம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரவாண்டியில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது
விழுப்புரம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) விக்கிரவாண்டி சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படும் இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்வு செய்யலாம். முகாமில் கலந்துகொள்ள வரும் இளைஞர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் அசல், நகல் மற்றும் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2 ஆகியவற்றுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஆண், பெண் இருபாலருக்கும் வயது வரம்பு 18 முதல் 40 வரை இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும். மேலும் விவரம் அறிய சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகத்தை 04146-223736 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் அலுவலகத்தை 04146- 226417 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.