அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை: 50 ஆயிரம் பேர் வரவேற்பு கொடுப்பார்கள்


அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை: 50 ஆயிரம் பேர் வரவேற்பு கொடுப்பார்கள்
x

கரூரில் 1-ந்தேதி நடைபெறும் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் 50 ஆயிரம் பேர் வரவேற்பு கொடுப்பார்கள் என பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கூறினார்.

கரூர்

பா.ஜ.க. ஆலோசனை கூட்டம்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை தொடர்பான கரூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 1-ந்தேதி கரூருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வருகை புரிகிறார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க தயாராக உள்ளோம். 50 ஆயிரம் பேர் அவருக்கு வரவேற்பு கொடுப்பார்கள்.கரூர் மாநகர் முழுவதும் அன்று விழாக்கோலமாக இருக்கும். கரூரை தொடர்ந்து கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் அவரின் சுற்றுபயணம் இருக்கிறது. அரவக்குறிச்சி தொகுதியில் தீபாவளி பண்டிகை முடிந்து மிகசிறப்பாக சுற்றுபயணம் நடைபெறும்.

தமிழகத்தில் தீவிரவாதம் பரவி இருக்கிறது

கவர்னர் மாளிகையை சாதாரணமான சந்தை திடலாக கருதி கொண்டிருக்கிறார்கள். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர்கிற வரை தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக தான் இருக்கும். குண்டு வீசுவது, பா.ஜ.க. கொடியை அகற்றுவது, நிகழ்ச்சிகளை ரத்து செய்வது, நிர்வாகிகளை எந்தவகையில் கைது செய்யலாம் என இதற்காக மட்டும் நடத்துகிற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. கவர்னர் மாளிகையில் குண்டு வீசிகிற அளவிற்கு தீவிரவாதம் தமிழகத்தில் பரவி இருக்கிறது என்றால் பிரதமர் மோடி 356 பயன்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்றைக்கு கவர்னர் மாளிகைக்குள் குண்டு வீசப்பட்டதோ, அன்றைக்கே தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து போய்விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story