சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-பாதுகாப்பு பிரசார திட்டம்


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-பாதுகாப்பு பிரசார திட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரசார திட்டத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து, பள்ளி தூய்மை குறித்த பதாகையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மயிலாடுதுறை


மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரசார திட்டத்தை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து, பள்ளி தூய்மை குறித்த பதாகையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 488 அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், பள்ளி கல்வித்துறை மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு திட்டம், இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளி தூய்மை பிரசாரம் திட்டங்களை வெளியீடு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலின் மதிப்புகளை புகுத்தவும், வலுப்படுத்தவும், பள்ளிகளில் பசுமையை அதிகரிப்பது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், கழிவு மேலாண்மை நடைமுறைகள், பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்தல், மறு சுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மாணவர்களை ஊக்குவித்தல் போன்றவைகள் இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.

மாணவர்களின் கற்றல் திறன்

இத்திட்டமானது கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோருக்கு சிறந்த தூய்மையான பள்ளி விருது, சிறந்த சுற்றுச்சூழல் வழிகாட்டு ஆசிரியர் விருது மற்றும் சுற்றுச்சூழல் நட்சத்திரம் விருது மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார். தொடர்ந்து கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பாக கற்றல் திறனை வெளிப்படுத்திய மாணவ- மாணவிகளை பாராட்டினார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story