திமுகவின் முகத்திரையை கிழிக்க ஈபிஎஸ் தலைமை வேண்டும் - அதிமுக முன்னாள் எம்எல்ஏ


திமுகவின் முகத்திரையை கிழிக்க ஈபிஎஸ் தலைமை வேண்டும் - அதிமுக முன்னாள் எம்எல்ஏ
x

அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டுமென்று வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவின் முகத்திரையை கிழிக்க அதிமுகவில் ஒற்றைத்தலைமை அவசியம் என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயக்கம் செயல்பட வேண்டுமென்றும் வேடசந்தூர் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

திமுக அரசு தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக 'திராவிட மாடல்', 'விடியல் அரசு', 'சமூக நீதி கூட்டமைப்பு' என்று தொடர்ந்து முக்காடு போட்டு மக்களை ஏமாற்றி வருகிறது. அந்த முகத்திரையை கிழித்து மீண்டும் அதிமுக அரியணையில் ஏறுவதற்கு ஒற்றைத் தலைமை என்பது மிக மிக அவசியம் என்பதை கழகத்தின் இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் சார்பாக மாநில நிர்வாகிகள், மாவட்ட பாசறை செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.

அதேபோல, இந்த இயக்கத்தில் இணைந்துள்ள எண்ணற்ற இளைய சமுதாயத்தினர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அனைவருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தி மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அண்ணாவின் பெயரை காப்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story