பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்


பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்
x

பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பாக பயணித்து வந்து, பங்கேற்று பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வில் அரங்கேறி வரும் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது.

இந்தநிலையில், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,

நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பாக பயணித்து வந்து, பங்கேற்று பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என அதிமுக பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story