எறையூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


எறையூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி எறையூர் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள எறையூரில் அரசு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சர்க்கரை ஆலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அண்ணா தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், அண்ணா தொழிற்சங்க செயலாளர் உலகநாதன், பா.ம.க. தலைவர் செல்வராஜ், செயலாளர் பார்த்திபன், கரும்பு உதவியாளர் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் பொன்னுசாமி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி சர்க்கரை பிரிவு மாநில செயலாளர் திருஞானசம்பந்தம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் இரட்டை ஊதிய முறையை களைந்து அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story