ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; போட்டியில்லை, ஆதரவும் இல்லை: பாமக அறிவிப்பு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; போட்டியில்லை, ஆதரவும் இல்லை: பாமக அறிவிப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளர்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவது இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளர். அதேபோல், எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த ஓ பன்னீர் செல்வம் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கோர உள்ள நிலையில், பாமக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story