ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது.

இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிர்ஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story