ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்
அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஓபிஎஸ் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில் பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம் எனவும் ஓ. பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, அதிமுக கூட்டணி கட்சித்தலைவர்களை சந்திக்க ஓ பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரை சந்தித்து இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஓபிஎஸ் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story