இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x

இலவச பஸ்சில் போக ஒவ்வொரு பெண்களும் அவமானப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. யானை பசிக்கு சோளப்பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது தாலிக்கு தங்கம் போன்ற நல்ல திட்டங்களை திமுக அரசு மூடிவிட்டது.

பஸ்சில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் போக அவமானப்படுகிறார்கள். ஓசில ஏற வந்துடீங்களா-னு பஸ்-ல பெண்களை கிண்டல் பன்றாங்க.

ஓசி பயணம் என்ற அமைச்சரே பேசுவதா?, அவரை முதல்-அமைச்சரே கண்டிக்காதது ஏன்? மேயரிடம் அமைச்சர் அதிகார தொனியில் பேசியது சரியானது அல்ல. அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் ஸ்டாலின் செயல்பாடுகள் உள்ளன.

ஒபிஎஸ்-க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. அவர்களது செயல்பாடுகள் அறிக்கைகள், டிவிட்டரில் மட்டும் தான். பருவமழை வரவுள்ளது, மழை நீர்வடிகால் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story