எடப்பாடி பழனிசாமியின் வலுவான ஆளுமைக்கு சான்று: தொல். திருமாவளவன் வாழ்த்து


எடப்பாடி பழனிசாமியின் வலுவான ஆளுமைக்கு சான்று:  தொல். திருமாவளவன் வாழ்த்து
x

அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு மூலம் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழனிச்சாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.

அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும்பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே" என்று பதிவிட்டுள்ளார்.




Next Story