மாவட்டத்தில் 48 ஆயிரத்து 145 பேர் குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர்


மாவட்டத்தில் 48 ஆயிரத்து 145 பேர் குரூப் 4 தேர்வை எழுதுகின்றனர்
x

திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை 48 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர். 147 மையங்களில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை 48 ஆயிரத்து 145 பேர் எழுதுகின்றனர். 147 மையங்களில் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத ஏராளமானோர் விண்ணப்பித்ததுடன், அதற்காக ஆர்வமுடன் படித்து வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் இந்த தேர்வை திருப்பூரில் 4,697 பேர், அவினாசியில் 4,642 பேர், தாராபுரத்தில் 6,157 பேர், காங்கயத்தில் 4,761 பேர், மடத்துக்குளத்தில் 1,875 பேர், ஊத்துக்குளியில் 1,628 பேர், பல்லடத்தில் 3,766 பேர், திருப்பூர் வடக்கு தாலுகாவில் 6,584 பேர், திருப்பூர் தெற்கு தாலுகாவில் 6,981 பேர், உடுமலையில் 7,054 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 145 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

பறக்கும் படையினர்

மாவட்டம் முழுவதும் 147 மையங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க 166 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 43 மொபைல் கண்காணிப்பாளர்கள், 16 பறக்கும் படையினர், 174 வீடியோ கிராபர்கள், சூப்பர்வைசர்கள் 166 பேர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

குரூப் 4 தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Related Tags :
Next Story