குரூப்-4 தேர்வை 35ஆயிரத்து 723 பேர் எழுதினார்கள்.


குரூப்-4  தேர்வை 35ஆயிரத்து 723 பேர் எழுதினார்கள்.
x

மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 35ஆயிரத்து 723 பேர் எழுதினார்கள்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 35ஆயிரத்து 723 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 6652 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு சிவகங்கை மாவட்டத்தில் 159 மையங்களில் நடைபெற்றது. இதில் சிவகங்கை வட்டத்தில் 38 மையங்களில் தேர்வு எழுத 9,069 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7,607 பேர் தேர்வு எழுதினார்கள். 1,462 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேவகோட்டை வட்டத்தில் 12 மையங்களில் தேர்வு எழுத 3,922 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 3,231 பேர் தேர்வு எழுதினார்கள். 691 பேர் தேர்வு எழுதவில்லை. இளையான்குடி வட்டத்தில் 9 மையங்களில் தோ்வு எழுத 2,555 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 2,209 பேர் தேர்வு எழுதினார்கள். 346 பேர் எழுதவில்லை.

தேர்வு எழுதினர்

காளையார்கோவில் வட்டத்தில் 14 மையங்களில் தோ்வு எழுத 3,342 விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,824 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 518 பேர் எழுதவில்லை. காரைக்குடி வட்டத்தில் 34 மையங்களில் தோ்வு எழுத 10,275 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,295 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 1,980 பேர்் வரவில்லை. மானாமதுரை வட்டத்தில் 21 மையங்களில் தோ்வு எழுத 4,828 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,227 பேர் தேர்வு எழுதினார்கள். 601 பேர் வரவில்லை.

சிங்கம்புணரி வட்டத்தில் 6 மையங்களில் தோ்வு எழுத 1,547 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,342 பேர் தேர்வு எழுதினார்கள். 205 பேர் வரவில்லை. திருப்புவனம் வட்டத்தில் 16 மையங்களில் தேர்வு எழுத 4,399 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,913 பேர் தேர்வு எழுதினார்கள். 486 பேர் எழுதவில்லை. திருப்பத்தூர் வட்டத்தில் 9 மையங்களில் தோ்வு எழுதிட 2,438 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2,075 பேர் தேர்வு எழுதினார்கள். 363 பேர் வரவில்லை.

ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 159 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மொத்தம் 42,375 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 35,723 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 6,652 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வுகள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையக்குழு உறுப்பினர் பாலுச்சாமி மற்றும் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



Next Story