தர்மபுரி மாவட்டத்தில் 2 மையங்களில்பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிஇன்று தொடங்குகிறது


தர்மபுரி மாவட்டத்தில் 2 மையங்களில்பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிஇன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 2 மையங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. தர்மபுரியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் தலைமையிலும், அரூரில் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால் தலைமையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. 1,000 ஆசிரியர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள்.


Next Story