மேட்டூர் அணையின் 16 கண் மதகுகளில் உபரி நீர் திறப்பு - காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை


மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சேலம்:

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை தன் உச்ச மட்ட நீர்மட்டமான 120 எட்டி காலை 10 மணிக்கு நிரம்பியது.

இதனையடுத்து அணையின் இடது கரையான 16 கண் பாலம் பகுதியில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேங்காய் பழம் வைத்து கற்பூர ஆரத்தி காட்டு காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் பொதுப்பணி துறையின் மேட்டூர் நிர்வாகப் பொறியாளர் சிவகுமார் உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ் அனைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை 16 கண் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள புதுப்பாலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தார்கள்.


Next Story