செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு


செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக குறைப்பு
x

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு இன்று 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வந்ததால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்படது.

நேற்றைய தினம் 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறையும் பட்சத்தில் நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story